news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews பெங்களூரை சேர்ந்த பக்தர் 7 தங்க ஆபரணங்களை வழங்கினார்
tv

Also Watch

tv

Read this

பெங்களூரை சேர்ந்த பக்தர் 7 தங்க ஆபரணங்களை வழங்கினார்

திருமலை திருப்பதி

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திருப்பதி

ஏழுமலையானுக்கு 753 கிராம் தங்க ஆபரணங்கள் காணிக்கை :

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பெங்களூரு பக்தர் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க ஆபரணங்களை காணிக்கையாக வழங்கியுள்ளார். பெங்களூரை சேர்ந்த பக்தர் மகாதேவம்மா என்பவர், 94 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 753 கிராம் எடை கொண்ட 7 தங்க ஆபரங்களை காணிக்கையாக வழங்கினார். இதை கோவில் அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

உறவில் விரிசல் ஏற்பட்டதால் தோழி ஆத்திரம் :

சத்தீஸ்கரில் சிறப்பு அதிரடிப் படை காவலரின் மனைவி, மகனை கத்தியால் குத்திக் கொலை செய்த தோழியை போலீஸார் கைது செய்தனர். துர்க் பகுதியில் வசிக்கும் லலிதேஷ் யாதவுக்கு, மனைவி, மகன், 2 மகள்கள் உள்ள நிலையில், சரோஜினி என்ற பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது. இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், லலிதேஷ் மனைவி, மகன், மகள்களை கத்தியால் குத்தினார்.

பெர்த் டே பேபியின் முகத்தில் கேக் பூசியதால் ஏற்பட்ட மோதல் :

உத்தரபிரதேசத்தின் புலந்தஷர் மாவட்டத்தில் உடற்பயிற்சி மையத்தில் கொண்டாடப்பட்ட பிறந்தநாள் நிகழ்ச்சியில் 3 இளைஞர்கள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உயிரிழந்த இளைஞர்களில் ஒருவர், பெர்த் டே பேபியின் முகத்தில் கேக்கை பூசியதாகவும், அப்போது ஏற்பட்ட தகராறில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

சிக்கந்தர்பூர் மெட்ரோ அருகே குடிசை பகுதியில் பாரிய தீ விபத்து  :

ஹரியானா மாநிலம் குருகிராமின் சிகந்தர்பூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள குடிசைப் பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வாகனங்கள், தண்ணீரை அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன. இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை தீயணைப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

லாரியும்- டிரெய்லர் டிரக்கும் நேருக்கு நேர் மோதல் :

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம், குலியன்னா அருகே, லாரியும்- டிரெய்லர் டிரக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஓட்டுநர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மற்றொருவர் தீயில் சிக்கிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Link
40 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த நபர்

40 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த நபர்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது

2
9 hrs 6 mins agoshare
லாட்டரி விற்பனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved