news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews விவாகரத்து குறித்து அனுபவத்தை பகிர்ந்த நடிகை ஹன்சிகா
tv

Also Watch

tv

Read this

விவாகரத்து குறித்து அனுபவத்தை பகிர்ந்த நடிகை ஹன்சிகா

ஹன்சிகா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஹன்சிகா

கடினமாக இருந்த தனது 2 ஆண்டுகள் இருண்ட காலம் : 

தனது வாழ்க்கையில் கடந்த 2 ஆண்டுகள் மிகவும் கடினமான, இருண்ட காலமாக இருந்ததாக நடிகை ஹன்சிகா திருமண விவாகரத்து குறித்து அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்த அவர், தனது கடினமான சமயத்தில் எனது தாய் மோனா மோத்வானி மற்றும் சகோதரர் பிரசாந்த் மோத்வானி ஆகியோர்தான் பெரும் உறுதுணையாக இருந்தனர் எனவும், மன அழுத்தத்திலிருந்து மீள அவர்கள் எனக்கு பக்கபலமாக நின்றனர் என கூறினார்.

கருப்பு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா :

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் கருப்பு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் இன்று பிரமாண்டமாக நடைபெறும் புதிய விடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில், த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சூர்யா பிறந்தநாளான கடந்த ஆண்டு ஜூலை 23ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

'29' திரைப்படத்தின் 4 வது பாடல் நாளை வெளியாகிறது :

மேயாத மான் திரைப்படத்தின் இயக்குநர் ரத்னகுமார் இயக்கியுள்ள '29' என்ற திரைப்படத்தின் 4 வது பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்', லோகேஷ் கனகராஜின் 'ஜி-ஸ்குவாட்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் 'ரெட்ரோ' படத்தில் வில்லனாக நடித்த விது, ப்ரீத்தி அஸ்ரானி, மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ் பிரேம்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 8 ஆம் தேதி வெளியாகிறது.

“இரண்டு வானம்” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது :

விஷ்ணு விஷால், மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள “இரண்டு வானம்” திரைப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. முண்டாசுப்பட்டி இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கொடைக்கானல் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் நிறைவடைந்து படத்தின் வெளியீட்டிற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 'இரண்டு வானம்' படத்தில் பாடலாசிரியர் மதராஜே வரிகளில் கபில் கபிலன் பாடியுள்ள 'வெள்ளிச்சுடரே' பாடல் வெளியாகியுள்ளது.

கோடி ரூபாய் கொடுத்தாலும் அதை செய்ய மாட்டேன் :

"தான் எந்த விளம்பரங்களுக்கும் ஆதரவு தரமாட்டேன் எனவும், சூதாட்டம் மற்றும் மதுபானம் தொடர்பானவற்றையும் புரமோஷன் செய்ய மாட்டேன் என நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமார் தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அவர், சில விளம்பர நிறுவனங்கள் குளிர் பானங்களுக்கான விளம்பரங்களில் நடிக்க கோடிக்கணக்கில் பணம் கொடுக்க முன்வந்தும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை" எனக் கூறினார்.

Related Link
விஜய் எடுத்த முடிவு.. வருகிறதா தளபதி 70?

விஜய் எடுத்த முடிவு.. வருகிறதா தளபதி 70?



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொளுத்தும் வெயிலுக்கு நடுவே... வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்

0
19 mins agoshare
6 மாவட்டங்களில் கனமழைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved