news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மரத்தின் மீது மோதியதால் பள்ளத்தில் கவிழாமல் தப்பிய கார்
tv

Also Watch

tv

Read this

மரத்தின் மீது மோதியதால் பள்ளத்தில் கவிழாமல் தப்பிய கார்

வால்பாறை - கோவை

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வால்பாறை

பள்ளத்தில் கவிழாமல் தப்பிய கார் : 

வால்பாறை சாலை மூன்றாவது கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா பயணியின் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - நான்கு குழந்தைகள் உட்பட எட்டு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஆனைமலை ஏப்ரல்.25 தற்போது பள்ளி கோடை விடுமுறை என்பதால் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகளின் வருகை என்பது அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் இன்று திருச்சி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் மற்றும் இவரது மனைவி மகள் மருமகள் குழந்தைகள் நான்கு பேர் என எட்டு பேர் வால்பாறை பகுதிக்கு சுற்றுலா சென்று விட்டு மீண்டும் வால்பாறை பகுதியில் இருந்து பொள்ளாச்சிக்கு கோமதி வாகனத்தை ஓட்டி வந்துள்ளார்.

அப்போது வால்பாறை சாலையில் உள்ள மூன்றாவது கொண்டை ஊசி வளைவு அருகே திடீரென வாகனம் பிரேக் பிடிக்காமல் இருந்த நிலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டு இழந்த வாகனம் கொண்டை ஊசி வளைவு பகுதியில் உள்ள தடுப்பு சுவரை இடித்த நிலையில் பள்ளத்தில் கவர்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

அப்போது பள்ளத்தில் இருந்த ஒரு மரம் வாகனத்தை தடுத்து நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வாகனத்தில் பயணம் செய்த சாய் குமாரிக்கு காலில் காயங்களுடனும் இவரது மருமகள் கௌரிக்கு லேசான காயம் ஏற்பட்டது மற்ற அனைவரும் நலமாக உள்ளனர்.

அவர்களை மீட்ட வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு இருவரையும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தற்போது பொள்ளாச்சி
அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வாரம் இதேபோல் கேரளா மாநிலத்தில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளின் வாகனம் கொண்டை ஊசி வளைவில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த விபத்து ஏற்பட்டதால் வால்பாறை சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Link
மலரத் தொடங்கிய பூக்களை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிப்பு

மலரத் தொடங்கிய பூக்களை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தனுஷின் 'கர' திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்

0
12 mins agoshare
கர








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved