பாலிவுட் திரையுலகை எண்ணி அருவருப்பாக உணர்வதாக இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இந்தி சினிமா துறையில் திரைப்படங்களை இயக்கி வெறுத்து விட்டதாகவும், அங்கு புதிதாக எந்த முயற்சியும் தன்னால் செய்ய முடியவில்லை எனவும் வேதனை தெரிவித்தார்.