Also Watch
Read this
Posted on: Mar 18, 2026 02:11 PM
By: Fyrose Banu

திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் மாயமான இளம் பெண்னை போலீசார் 2 மணி நேரத்தில் மீட்டனர். திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் பிளஸ் டூ படித்து வந்துள்ளார். நேற்று தேர்வு முடிந்து வீடு திரும்பவில்லை இதனால் பெற்றோர் நேற்று இரவு 8 மணிக்கு ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பிளஸ் டூ மாணவி மாயம்
இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார் உத்தரவின் பேரில் ஆய்வாளர் திலீபன் மேற்பார்வையில் எஸ்.ஐ. முகிலரசன் தலைமை காவலர்கள் ஜெயகாந்த், வேலுமணி பெண் தலைமை காவலர் சுகந்தி ஆகியோர் இளம்பண்ணை தேடி வந்தனர். காயல்பட்டினம் பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தினர்.
இளைஞருடன் சென்ற இளம்பெண் மீட்பு
இதில் இளம்பெண் பள்ளி முடிந்ததும் இளைஞருடன் ஒருவருடன் பைக்கில் ஏறி சென்ற சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி இரவு 10 மணிக்கு இளம்பெண்ணை மீட்டு இன்று மாலை காப்பகத்தில் ஒப்படைத்தனர். இளம்பெண் மாயமான இரண்டு மணி நேரத்தில் இளம்பிள்ளை போலீசார் மீட்ட சம்பவம் பொது மக்களிடையே பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved