news-tamil-logo

3/18/2026, 3:00:34 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாபெரும் இளவட்ட மஞ்சுவிரட்டு
tv

Also Watch

tv

Read this

மாபெரும் இளவட்ட மஞ்சுவிரட்டு

சிவகங்கை

Posted on: Mar 18, 2026 08:52 AM

3

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
svg 2(4)

சிங்கம்புணரி பெரியகடை வீதியில் பங்குனி பொங்கலை முன்னிட்டு கிராமத்தார்கள் நடத்தும் மாபெரும் இளவட்ட மஞ்சுவிரட்டு, சீறிப்பாய்ந்த காளைகளிடம் சிக்கி 20பேர் காயமடைந்த நிலையில் ஒருவர் மேல்சிகிச்சைக்கு மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இளவட்ட மஞ்சுவிரட்டு போட்டி
சிங்கம்புணரி பெரியகடை வீதியில் பங்குனி பொங்கல் விழாவை கொண்டாடும் விதமாக கிராமத்தார்கள் சார்பில் இளவட்ட மஞ்சுவிரட்டு நடைபெற்றது. பெரிய கடைவீதியில் நடைபெற்ற இந்த இளவட்ட மஞ்சுவிரட்டில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டகளிலிருந்தும் சிங்கம்புணரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகள் பங்கேற்றன.

கோயில் காளைகளுக்கு முதல்மரியாதை
முன்னதாக சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் இருந்து ஜவுளிகள் கொண்டு வரப்பட்டு சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் காளைகளுக்கு முதல்மரியாதை செய்து இளவட்ட மஞ்சுவிரட்டை துவக்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகளை கட்டு மாடுகளாக பெரியகடை வீதியில் ஆங்காங்கே அவிழ்த்து விட்டனர். இதில் காளைகள் கூட்டத்திற்கு மத்தியில் சீறிப்பாய்ந்து சென்றன. அதில் 20பேர் காயமுற்றனர். அவர்களை சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த ஒருவரை மட்டும் மேல்சிகிச்சைகாக மதுரைக்கு அனுப்பி வைத்தனர்

மஞ்சுவிரட்டை கண்டுகளித்த 3,000பேர்
பங்குனி பொங்கலை கொண்டாடும் விதமாக நடத்தப்படும் இந்த இளவட்ட மஞ்சுவிரட்டில் சுமார் 3,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பொதுமக்கள், சிறுவர்கள், பெரியவர்கள், மஞ்சுவிரட்டு பிரியர்கள் என பெரியகடை வீதியில் உள்ள கட்டிடங்களிலும் மொட்டை மாடி வீடுகளிலும் சாலை ஓரங்களிலும் பார்வையாளராக நின்று சீறிப்பாய்ந்து சென்ற இளவட்ட மஞ்சுவிரட்டை கண்டு ரசித்தனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
13 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved