கடந்த பிப்ரவரி மாதத்தில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 449 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டதாக, ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது, 7 புள்ளி 91 சதவீதம் குறைவு ஆகும். 2024 பிப்ரவரியில் 4 லட்சத்து 58 ஆயிரத்து 711 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.