Also Watch
Read this
Posted on: Mar 24, 2026 11:58 AM
இன்று காலை தங்கத்தின் விலை குறைந்த நிலையில், பிற்பகலில் விலை அதிகரித்து உள்ளது. ஒரு சவரனுக்கு ரூ. 2,000 உயர்ந்து ஒரு சவரன் 1,06,000 ரூபாய்க்கும், ஒரு கிராமுக்கு ரூ.250 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 13,250 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
மார்ச்-19
சென்னையில், ஆபரண தங்கத்தின் விலையில் ஒரு கிராமுக்கு 270 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 14,300 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையும் ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. பிற்பகலில், மேலும் 3,200 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1 லட்சத்து 11 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
மார்ச்-20
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து, சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் 50 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 950 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் உயர்ந்த நிலையில், வெள்ளி விலை சரிந்தது. கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.260-க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ வெள்ளி 5 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.
மார்ச்-21
ஒரு சவரனுக்கு 2 ஆயிரத்து 640 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 330 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 620 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் குறைந்தது. ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
மார்ச்- 23 இறக்கம், ஏற்றம்
ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 7 ஆயிரத்து 600 ரூபாய் குறைந்து மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கத்தின் விலை, திடீரென 5 ஆயிரத்து 360 ரூபாய் அதிகரித்து அதிர்ச்சி கொடுத்தது. விலை உயர்வுக்கு பிறகு ஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 720 ரூபாய்க்கும், கிராமுக்கு 670 ரூபாய் அதிகரித்து 13 ஆயிரத்து 340 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. காலையில் கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 235 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளி மீண்டும் 15 ரூபாய் அதிகரித்து 250 ரூபாய்க்கும், கிலோவுக்கு 15 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மார்ச்-24 காலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 2,720 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் ஒரு கிராமுக்கு 340 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தைப் போன்று வெள்ளி விலையிலும் சரிவு ஏற்பட்டு, ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 240 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
மார்ச் -24 பிற்பகல்
இன்று காலை தங்கத்தின் விலை குறைந்த நிலையில், பிற்பகலில் விலை அதிகரித்து உள்ளது. ஒரு சவரனுக்கு ரூ. 2,000 உயர்ந்து ஒரு சவரன் 1,06,000 ரூபாய்க்கும், ஒரு கிராமுக்கு ரூ.250 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 13,250 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலை இன்று காலை கிராமுக்கு ரூ. 10 குறைந்து ரூ.240-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ரூ.2.40 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று பிற்பகல் ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.250க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2.50 லட்சத்துக்கும் விற்பனை ஆனது.
ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்...
19 மார்ச் - ரூ.1,11,200
20 மார்ச் - ரூ.1,11,600
21 மார்ச் - ரூ.1,08,960
23 மார்ச் - ரூ.1,06,720
24 மார்ச் - ரூ.1,04,000 இன்று காலை
24 மார்ச் - ரூ.1,06,000 இன்று பிற்பகல்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved