news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews காளையின் உடலுக்கு வேட்டி துண்டு அணிவித்து பெண்கள் ஒப்பாரி
tv

Also Watch

tv

Read this

காளையின் உடலுக்கு வேட்டி துண்டு அணிவித்து பெண்கள் ஒப்பாரி

கண்மாய்பட்டி, மதுரை

24

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mdu jallikatu kalai death

வேட்டி துண்டு அணிவித்து பெண்கள் ஒப்பாரி  :

இந்த காளை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு மற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகள் பல பெற்று கிராமத்திற்கு பெருமை சேர்த்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக இக்காளை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காளை உயிரிழந்தது. இது கிராம மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி காளைக்கு மாலை மற்றும் வேஷ்டி, துண்டு அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் கரகாட்டம் ஆடியும், கிராம பெண்கள் கும்மி கொட்டியும் மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, மேளதாளங்களுடன் கிராமத்தின் ஊழி முக்கிய சாலைகளின் வழியாக காளை இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோவில் அருகே வழிபாடு செய்து கண்ணீருடன் காளையை கிராம மக்கள் நல்லடக்கம் செய்தனர்.

இந்த நிகழ்வு கிராமப்புற மக்களுக்கும், தாங்கள் வளர்த்து வரும் காளைகளுக்கும் இடையிலான பாசத்தையும், பாரம்பரிய மரபுகளையும் வெளிப்படுத்தும் வகையில் அமைத்திருப்பது குறிப்பிடதக்கது.

Related Link
போராட்ட அறிவிப்பால் ரயில் பாதையில் போலீசார் குவிப்பு

போராட்ட அறிவிப்பால் ரயில் பாதையில் போலீசார் குவிப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரபரப்பான சூழலில் பனையூரில் நின்று சொன்ன அமைச்சர் செங்கோட்டையன்..!

3
3 hrs 23 mins agoshare
Sengottayanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved