news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வெள்ளி கடற்கரையில் ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சி
tv

Also Watch

tv

Read this

வெள்ளி கடற்கரையில் ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சி

தேவனாம்பட்டினம், கடலூர்

Posted on: Mar 24, 2026 02:33 PM

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CDL Turtle

ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சி :

கடலூர் மாவட்ட கடற்கரையோரம் ஆலிவ் ரெட்லி வகை ஆமைகள் முட்டையிடுவதற்காக டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை வந்து செல்லும். அவ்வாறு வரும் போது, கடற்கரையோரம் கிடக்கும் பிளாஸ்டிக்கை ஜெல்லி மீன்கள் என்று சாப்பிடும் போதும், கப்பல்களில் அடிப்பட்டும் ஆமைகள் உயிரிழந்து வருகிறது.

மேலும் கடற்கரையோரம் ஆமைகள் இடும் முட்டைகளை காகம், நாய்கள் உள்ளிட்டவை சாப்பிட்டு வீணாக்கி வந்தது. இதை அறிந்த வனத்துறையினர், இந்த ஆமை முட்டைகளை ஆண்டுதோறும் சேகரித்து, அதை பொரிப்பகத்தில் வைத்து குஞ்சு பொரித்தவுடன் கடலில் விட்டு வருகின்றனர். இதற்காக தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் பொரிப்பகம் அமைத்து உள்ளனர்.

இந்த ஆண்டு இது வரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முட்டைகளை வனத்துறையினர் தன்னார்வலர்கள் உதவியுடன் சேகரித்து உள்ளனர். அதில் இருந்து ஆமைய குஞ்சு பொரித்தவுடன் கடலில் விட்டு வருகின்றனர். இந்த நிலையில்.

இன்று வனச்சரக அலுவலர் அய்யாசாமி தலைமையில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மற்றும் வன ஆர்வலர் செல்லா ஆகியோர் 100 ஆமை குஞ்சுகளை தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் விட்டனர். தொடர்ந்து ஆமை குஞ்சுகள் பொரித்தவுடன் படிப்படியாக கடலில் விடப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Link
திருச்செந்தூரில் த.வெ.க. நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்குப்பதிவு

திருச்செந்தூரில் த.வெ.க. நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்குப்பதிவு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சரக்கு கப்பல்களுக்கு ஈரான் சுங்க வரி வசூலிக்கிறதா?

0
59 mins agoshare
Toll








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved