news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பேனர்
tv

Also Watch

tv

Read this

சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பேனர்

வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை

Posted on: Mar 24, 2026 02:19 PM

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ranipet election

தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பேனர்  :

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சிக்குட்பட்ட 13-வது வார்டு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இதன் காரணமாக அங்கு வசிக்கும் குடும்பங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான போதிய சாலைகள் கால்வாய் மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகள் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால்.

சாலை வசதி பல வருடங்களாக குண்டும் குழியுமாக காட்சியளித்து தவித்து வருவதாகவும் அதேபோல் மழைக்காலங்களில் தண்ணீர் முழங்கால் அளவிற்கு சாலையில் தேங்கி அவசர காலத்தில் கூட வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்பு வலி காரணமாக முதியவர் ஒருவர் போராடிய நிலையில் 108 ஆம்புலன்ஸ் சாலை வசதி இல்லாத காரணத்தால் உள்ளே வர முடியாததால்
பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது..

இதையடுத்து மக்கள் அடிப்படை பிரச்சனைகள் தொடர்பாக நகராட்சி முதல் மாவட்ட ஆட்சியர் வரை அரசு அதிகாரிகளை சந்தித்தும் பலமுறை புகார் மனு கொடுத்தும் இதுநாள் வரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை தெரிகிறது.

இதனால் ஆவேசமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுடைய ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் தேர்தல் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பது என முடிவெடுத்து மேலும் தங்களுடைய கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில்.

வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முழுமையாக புறக்கணிக்கப்படும் என கூறி தங்களுடைய வீடு தோறும் கருப்பு கொடி கட்டி பேனர் வாயிலாக எச்சரிக்கை விடுத்தனர்..

Related Link
லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சிக்கினார் வி.ஏ.ஓ

லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சிக்கினார் வி.ஏ.ஓ


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சரக்கு கப்பல்களுக்கு ஈரான் சுங்க வரி வசூலிக்கிறதா?

0
1 hr 8 mins agoshare
Toll








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved