news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சிக்கினார் வி.ஏ.ஓ
tv

Also Watch

tv

Read this

லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சிக்கினார் வி.ஏ.ஓ

தண்டலச்சேரி, திருவள்ளூர்

Posted on: Mar 24, 2026 02:09 PM

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL VAO Arrest

சிக்கினார் VAO : 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்துக்குட்பட்ட தண்டலச்சேரி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் பிரபு (42). இவர் தண்டலச்சேரி கிராமத்தில் வாழ்ந்து வரும் சாலம்மாள் (60) என்ற மூதாட்டியின்
7 சென்டு நிலத்தை அளந்து பாகப்பிரிவினை செய்ய ஐம்பதாயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக சாலம்மாள் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் புகாரின் அடிப்படையில் தண்டலச்சேரி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

ஆனால் இன்று கிராம நிர்வாக அலுவலர் பிரபு வேலைக்கு வராமல் தனது சொந்த ஊரான சிருபுழல் பேட்டை கிராமத்தில் உள்ள தனது வீட்டிலேயே இருந்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் ஆலோசனையின்படி சாலம்மாள் கிராம நிர்வாக அலுவலர் பிரபுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

அப்போது தனது இடைத்தரகரான பாபு (62) என்பவரிடம் பணத்தை ஒப்படைக்குமாறு சாலமாவிடம் விஏஓ பிரபு தெரிவித்ததை தொடர்ந்து சாலம்மாள் பசை தடவிய ஐம்பதாயிரம் ரூபாய் கட்டினை இடைத்தரகர் பாபு உடன் வழங்கியுள்ளார்.

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இடைத்தரகர் பாபுவை கையும் களவுமாக பிடித்த நிலையில் அங்கிருந்து பாபுவை அழைத்துச் சென்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் பிரபுவையும் கையும் களவுமாக கைது செய்தனர்.

திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜெயக்குமார், ஆய்வாளர் மாலா தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடந்த மூன்று மணி நேரமாக விஏஓ பிரபு மற்றும் இடைத்தரகர் பாபு ஆகியோரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Link
உழவுப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என புகார்

உழவுப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என புகார்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சரக்கு கப்பல்களுக்கு ஈரான் சுங்க வரி வசூலிக்கிறதா?

0
32 mins agoshare
Toll








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved