Also Watch
Read this
நாடாளுமன்ற தேர்தலின்போதும் இபிஎஸ் தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்யவில்லை என்று சி.வி.சண்முகம் குற்றம் சாட்டி உள்ளார்.
தவெக உடன் கூட்டணி
சென்னை எம்ஆர்சி நகரில் செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம் கூறியதாவது;
வலிமையான கூட்டணியை அமைக்க மறுத்த காரணத்தால் தேர்தலில் தோல்வி அடைந்தோம். பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால் அதை இபிஎஸ் ஏற்கவில்லை. தேர்தலுக்கு முன்னர் தவெகவுடன் கூட்டணி வைக்க நாங்கள் வலியுறுத்தினோம் அதையும் கேட்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலின்போதும் இபிஎஸ் தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்யவில்லை.

அதிமுக படுதோல்வி
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த தேர்தல்களில் அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. அதிமுகவின் வாக்கு வங்கியும் கடுமையாக சரிந்து வருகிறது.

ஓபிஎஸ்-ஐ ஏற்க மறுத்த இபிஎஸ்
அடிப்படை உறுப்பினராக இருப்பேன் என்று ஓபிஎஸ் கூறிய போதும் அதனை ஏற்க மறுத்தார் இபிஎஸ். அதிமுகவை படுதோல்வி அடைய செய்ததற்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம்.
இவ்வாறு சி.வி.சண்முகம் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved