Also Watch
Read this
By: Manigandan Raja

ஊராட்சி செயலாளர் அராஜகம் என புகார் :
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிந்தலவாடி ஊராட்சி கீழ சிந்தலவாடி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் மனைவி அன்னக்கிளி 45. இவர் சிந்தலவாடியில் உள்ள தனது தாய்
வீட்டில் தனது கணவர் மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது கணவர் இறந்து விட்டார். அவரது தாயார் இருந்த வீடு அன்னக்கிளி பெயரில் இருந்ததால் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை
வீட்டு வரி ரசீது அவரது பெயரில் இருந்து வந்துள்ளது.
2026 ஆம் ஆண்டு வீட்டு வரி ரசீது வாங்குவதற்காக சிந்தலவாடி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சென்றுள்ளார். அப்போது தேர்தல் நடைபெறும் சமயமாக
இருந்ததால் தற்போது ஊராட்சி பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை தேர்தல் முடிந்த பின்பு வீட்டு வரி ரசீது வாங்கிக் கொள்ளலாம் என்று ஊராட்சி செயலர் ரவி கூறியுள்ளார்.
தேர்தல் முடிவடைந்து பின்னர் வீட்டு வரி ரசீது வாங்க சென்ற போது நாளை வா என்று கூறி பல நாட்களாக அலைகளித்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வீட்டு வரி ரசீது கேட்க சென்றபோது நீ அடிக்கடி வந்து தொல்லை பண்ணுகிறாய் அதிகமாக பேசுகிறாய் எனக் கூறி வாயினை டேப்பினால் சுற்றி நீ எங்கு வேண்டுமென்றாலும் சென்று புகார் செய்து
கொள் யாரும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என அதிகார திமிருடன் கூறியுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட பெண்மணி லாலாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது அப்புகாரினை விசாரித்த லாலாபேட்டை போலீசார் ஊராட்சி செயலர் ரவியை எச்சரித்து அவர்களுக்கு வீட்டு வரி ரசீது வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
மறுநாள் அன்னக்கிளி சென்று வீட்டு வரி ரசீது கேட்கும் போது என் மீது புகார் அளித்தாய் எதற்காக இங்கு வந்தாய் நீ பஞ்சாயத்து அலுவலகத்திற்கு உள்ளே வரக்கூடாது என்று அவரை வெளியே பிடித்து தள்ளி உள்ளார்.
சிந்தலவாடி ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் கோரிக்கை மற்றும் புகார்களை தெரிவிக்கும் போது அவர்களை ஊராட்சி செயலர் ரவி ஒருமையில் பேசி வருகிறார். மேலும் யாராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்ற ஆணவத்துடன் இருந்து வருகிறார்.
இது குறித்து அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்ற போது அவர் தொலைபேசியை எடுக்கவில்லை. எனவே, தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஊராட்சி செயலாளர் ரவி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்மணி மற்றும் சிந்தலவாடி ஊராட்சி பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved