Also Watch
Read this
By: Manigandan Raja

சக்தி கரகம் புறப்பாடு :
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது இந்த ஆலயத்தில் 107 ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் கடந்த 1ஆம் தேதி
கொடியேற்றத்துடன் தொடங்கி தினம்தோறும் மகாபாரத சொற்பொழிவுகள் நடைபெற்று வந்தன 18ஆம் நாள் உற்சவமான தீமிதி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் குத்தாலம் காவிரி தீர்த்த படித்துறையிலிருந்து சக்தி கரகம் புறப்பட்டு பின்னே அழகு காவடிகளுடன் ஊர்வலமாக புறப்பட்டு மேளதாள வாத்தியங்கள் முழங்க முக்கிய விதிகள் வழியாக ஆலயம் வந்தடைந்தனர்.
தொடர்ந்து ஆலயம் எதிரில் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் விரதம் இருந்த பக்தர்கள் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடன் நிவர்த்தி செய்தனர் அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதி திருவிழாவை கண்டுகளித்தனர் நிறைவாக பக்தர்களுக்கு அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved