Also Watch
Read this
By: Manigandan Raja

வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா :
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் அம்மன் குதிரை வாகனத்தில் திருவீதி உலா செல்லும் வேடபரி நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.
சிறப்பு வழிபாடுகளுக்கு பின் அம்மன் குதிரை வாகனத்தில் வைக்கப்பட்டு கோவிலில் இருந்து வீதிஉலா தொடங்கி ராஜவீதிகளின் வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தது. இதே போல் நகரில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள் தாரை தப்பட்டை முழங்க ஆட்டம் பாட்டத்துடன் முளைப்பாரி எடுத்து வந்தனர்.
இந்த திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு நகரில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டிருந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved