ஒரு வாக்காளர் வாக்களிக்க இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யாத வகையில் வாக்கு சாவடிகளை அமைக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு தொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ள இந்திய தேர்தல் ஆணையம், அனைவருக்கும் ஏற்ற வகையிலும், எளிதில் அணுகும் வகையிலும், அனைவருக்கும் தெரிந்த இடத்திலும் வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும் என கூறியுள்ளது.