ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி அக்டோபர் 8ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம், உதம்பூர் அரசுக் கல்லூரியில் நடைபெற்றது. இதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்ப்பு காகிதத் தணிக்கை இயந்திரமான விவிபேட் ((VVPAT)) ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும், அவற்றை கையாளும் முறைகள் குறித்தும் செயல்முறை விளக்கம் மூலம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.