சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது. 40 மாத காலமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும், மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.