news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news முதல்கட்டமாக 23 வேட்பாளர்கள்
tv

Also Watch

tv

Read this

முதல்கட்டமாக 23 வேட்பாளர்கள்

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவிப்பு

Posted on: Mar 25, 2026 10:37 AM

9

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும், முதல்கட்ட அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

அதிமுக தலைமையில்...
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா என மொத்தம் 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தொகுதிகளில், சில கட்சிகளுக்கு ஒதுக்கியது போக, சுமாராக 170 இடங்களில் அதிமுக 'இரட்டை இலை' சின்னத்தில் நேரடியாக போட்டியிட உள்ளது. தமாகா போன்ற சிறிய கூட்டணி கட்சிகளும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். 23 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ளார்.

* வழக்கம் போல் எடப்பாடி தொகுதியில் மீண்டும் இபிஎஸ் போட்டியிடுகிறார்

* வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி

* கோவை தொண்டாமுத்தூரில் எஸ்.பி.வேலுமணி

* சென்னை ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமார் போட்டி

* மதுரை மேற்கு தொகுதியில் செல்லூர் ராஜு

* மயிலம் தொகுதியில் சி.வி.சண்முகம்

* பாலக்கோடு தொகுதியில் கே.பி. அன்பழகன்

* நன்னிலம் தொகுதியில் காமராஜ்

* குமாரபாளையம் தொகுதியில் தங்கமணி போட்டி

* நத்தம் தொகுதியில் விஸ்வநாதன்

* வேதாரண்யம் தொகுதியில் ஓ.எஸ்.மணியன்

* விராலிமலை தொகுதியில் விஜயபாஸ்கர்

* திண்டுக்கல் தொகுதியில் திண்டுக்கல் சீனிவாசன்

* கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜு


* திருமங்கலம் தொகுதியில் ஆர்.பி. உதயகுமார்

* சிவகாசி தொகுதியில் கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் ரிலீஸ்

3
8 mins agoshare
admk list 2026button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved