Also Watch
Read this
By: Web Team

இந்தியா - கனடா இடையேயான வர்த்தகம் மற்றும் நல்லுறவை மேம்படுத்த இரு நாடுகள் தரப்பிலும் உயர்மட்ட அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
G7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, கனடா பிரதமர் மார்க் கார்னியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
வர்த்தகம், எரிசக்தி, விண்வெளி, தொழில்நுட்ப துறைகளில் கவனம் செலுத்தி இரு நாடுகள் இடையேயான உறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.
காலிஸ்தான் பிரிவினைவாதிகள் விவகாரத்தில் இந்தியா - கனடா இடையே மோதல் போக்கு நிலவி வந்த சூழலில், கனடாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு மீண்டும் பழைய நிலைமை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள் : PTR-ன் வாக்குமூலம்.. அன்புமணி ஆவேச கேள்வி
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved