news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews காணாமல் போன பெண் சடலமாக மீட்பு
tv

Also Watch

tv

Read this

காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

தேவர் ஹிப்பர்கி, கர்நாடகா

32

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வீட்டில் இருந்த பெண் திடீர் மாயம். ஒரு வாரத்திற்கு மேலாக மகளை தேடி அலைந்த தந்தை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் கண்ணீரோடு புகாரளித்த கணவன். வீட்டருகே கிடந்த மணல் குவியல். சந்தேகப்பட்டு தோண்டி பார்த்தபோது பேரதிர்ச்சி. நடந்தது என்ன?

* சந்தேகத்திற்குரிய விதத்தில் இருந்த மணல் குவியல்
* காவல் நிலையத்திற்கு தகவல் சொன்ன அக்கம் பக்கத்தினர்
* மண்ணுக்குள் தோண்டி பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி


சுத்திலும் ஏகப்பட்ட வீடு. அதுல ஒரு வீட்டுக்கு பக்கத்துல உள்ள காலியிடத்துல, எதையோ உள்ள புதச்சி வச்சிருக்குற மாதிரி மணல் குவியலா இருந்துருக்கு. அத பாத்த அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் வந்திருக்கு. இங்க யாரு எத புதச்சாங்கன்னு தெரியலையே, ஆனா குழி தோண்டி புதச்சிட்டு திரும்ப மணல போட்டு மூடுன மாதிரி தெரியுதேன்னு குழப்பத்துலேயே இருந்துருக்காங்க. அப்போதான், சந்தேகத்துக்குரிய இடத்துக்கு பக்கத்து வீட்டுல உள்ள ஒருத்தங்க ரெண்டு வாரமா காணோம்ங்குற விஷயம் தெருவுல உள்ளவங்களுக்கு தெரியவந்திருக்கு. கண்டிப்பா இதுல ஏதோ மர்மம் இருக்குன்னு சந்தேகப்பட்டு போலீஸுக்கு இன்ஃபார்ம் பண்ணிருக்காங்க. அதுக்கப்புறம், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், அந்த இடத்த தோண்டி பாத்தப்ப, ஒட்டுமொத்த கிராமமுமே கதிகலங்கிப்போய்ருச்சு.

Related Link
பட்டப்பகலில் நடந்த பகீர் செயல்

பட்டப்பகலில் நடந்த பகீர் செயல்

* தனியார் நிறுவனத்தில் ஹெல்பராக வேலை செய்து வந்த பிரபு
* மில்லில் வேலை பார்த்து, மருமகன் பிரபு வீட்டில் வசித்த சங்கர்
* மகள் சரோஜினி காணாமல் போனதால் சங்கர் பதற்றம்

கர்நாடக மாநிலம், விஜயபுராவுல உள்ள தேவர் ஹிப்பர்கி கிராமத்த சேர்ந்த பிரபுங்குறவரு தனியார் நிறுவனத்துல ஹெல்பர் வேலை பாத்துட்டு வந்துருக்காங்க. இவரோட மனைவி சரோஜினி. அவரோட அப்பா சங்கர், தன் மகளோட வீட்டுல தங்கி, பக்கத்து ஊர்ல உள்ள ஒரு மில்ல வேலை பாத்துட்டு வர்றாரு. மில் வேலைங்கிறதுனால அவருக்கு பகல் ஷிப்டும், நைட் ஷிப்ட்டும் மாறி மாறி வரும். அப்படி ஒருநாள் நைட் ஷிப்டுக்கு போய்ட்டு காலையில வீட்டுக்கு வந்திருக்காரு. அப்போ, மருமகன் பிரபு மட்டும்தான் வீட்டுல இருந்துருக்காரு. மகள் சரோஜினிய ஆள காணும். பிரபு கிட்ட கேட்டப்ப, அவ எங்க போனான்னு தெரியல, நானும் அவள தான் ரொம்ப நேரமா தேடிட்டு இருக்கேன்னு சொல்லிருக்காரு. கிட்டத்தட்ட ரெண்டு நாளைக்கு மேலாகியும் சரோஜினி வீடு திரும்பவே இல்ல.

* மகளை காணவில்லை என போலீஸில் புகாரளித்த சங்கர்
* சங்கர் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் விசாரணை

சரோஜினியோட ஃபோனும் சுவிட்ச் ஆப்லயே இருந்துருக்கு. சொந்தக்காரங்க வீடு, நண்பர்கள் வீடுன்னு பல இடங்கள்ல தேடியும் எந்த பலனும் இல்ல. அதனால, கணவன் பிரபுவும், தந்தை சங்கரும் போலீஸ் ஸ்டேஷன்ல போய், காணாமபோன சரோஜினிய கண்டுபிடிச்சு தரக்கோரி கம்ப்ளைண்ட் கொடுத்திருக்காங்க. இதனையடுத்து,சரோஜினிய போலீஸ் தேடிட்டு இருந்துருக்காங்க.

* பிரபு - சரோஜினி வீட்டருகே கிடந்த மணல் குவியல்
* சந்தேகப்பட்டு போலீஸுக்கு தகவல் சொன்ன அக்கம் பக்கத்தினர்
* மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த சரோஜினியின் சடலம் மீட்பு


இதுக்கு நடுவுல, சரோஜினியோட வீட்ட ஒட்டுன மாதிரி உள்ள இடத்துல, சந்தேகப்படும்படியா மணல் குவிஞ்சு கிடந்திருக்கு. ஆனா அத தந்தை சங்கர் கவனிக்கல. பக்கத்து வீட்டுக்காரங்க அந்த மணல் குவியல பாத்து சந்தேகப்பட்டுருக்காங்க. அதுவும் ஒரு ஆள குழி தோண்டி புதச்சா? எப்படி மணல் குவிஞ்சு கிடக்குமோ, அதே மாதிரி இருந்ததால, அவங்க சந்தேகம் அதிகமாகிருக்கு. அதனால மக்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் சொல்லிருக்காங்க. அதுக்கடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், சந்தேகத்துக்குரிய அந்த இடத்த தோண்டி பாத்தப்ப, மண்ணுக்குள்ள சரோஜினியோட சடலம் புதைக்கப்பட்டிருந்துருக்கு. அத பாத்ததும் தந்தை சங்கரும், கணவன் பிரபுவும் கதறி அழுதுருக்காங்க.

Related Link
விபத்து போல் செட்டப் செய்த பயங்கரம்

விபத்து போல் செட்டப் செய்த பயங்கரம்

* மாயமான 2 வாரத்திற்கு பின் சரோஜினியின் சடலம் மீட்பு
* சரோஜினியை புதைத்தது யார்? - போலீஸ் விசாரணை
* கணவன் பிரபு மீது திரும்பிய போலீசாரின் சந்தேக பார்வை

அதுக்கப்புறம், சடலத்த போஸ்ட் மார்டத்துக்காக கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வச்ச போலீஸ், சரோஜினிய யாரு கொன்னு புதைச்சது, என்ன நடந்துச்சுன்னு விசாரணையில இறங்குனாங்க. சங்கர் நைட் ஷிப்டுக்கு போறதுக்கு முன்னாடி சரோஜினி வீட்டுல தான் இருந்துருக்காங்க. ஆனா, காலையில திரும்பி வரும்போது வீட்டுல இல்ல.. அப்போ, அன்னைக்கு நைட்டு தான் ஏதோ நடந்துருக்கும்னு போலீஸ் கணிச்சிருக்காங்க. இந்த விஷயம் தெரிஞ்சதுல இருந்து போலீஸோட சந்தேகப் பார்வை, கணவன் பிரபு பக்கம் திரும்பிருக்கு.

* பிரபுவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை

* காவல்துறையினர் விசாரணையில் வெளிவந்த உண்மைகள்

ஏன்னா, சரோஜினி காணாம போன நைட், வீட்டுக்கு வெளியாட்கள் யாரும் வந்து போகலன்னு அக்கம்பக்கத்துல சொல்லிருக்காங்க. அப்படி பாத்தா, வீட்டுல இருந்த கணவன் பிரபு தான் மனைவிய கொன்னுட்டு, நைட்டோட நைட்டா வீட்டு பக்கத்துலேயே புதச்சிருக்கனும்னு சந்தேகப்பட்ட போலீஸ், பிரபுவை ஸ்டேஷனுக்கு கூப்பிட்டுட்டு போய் கவனிக்க வேண்டிய விதத்துல கவனிச்சாங்க. அதுலதான், சரோஜினிக்கு நடந்த கொடுர சம்பவமே வெளிச்சத்துக்கு வந்துச்சு. மதுபோதைக்கு அடிமையான பிரபு, வேலைக்கு போய் சம்பாதிச்ச பணத்த வீட்டுல கொடுக்காம அத குடிச்சே அழிச்சிருக்காரு. இது சம்பந்தமா கணவன் - மனைவி இடையில அடிக்கடி தகராறு ஏற்பட்டுருக்கு. இந்த சூழல, பிரபு பல இடங்கள்ல மனைவி சரோஜினி பேர்ல கடன் வாங்கிருந்துருக்காரு. பணம் கொடுத்தவங்களாம் சரோஜினிக்கு ஃபோன் பண்ணி கேட்டுருக்காங்க. தெனமும் மது குடிக்குறது மட்டுமில்லமா, என் பேர்லேயே கடன் வாங்கி வச்சிருக்கியான்னு கேட்டு கணவன் பிரபுக்கிட்ட கோபமா சண்ட போட்டுருக்காங்க.

* வழக்கம்போல் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட சண்டை

* வீட்டின் பின்புறத்தில் குழி தோண்டி சடலத்தை புதைத்த பிரபு

* பிரபு மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைப்பு

இந்த கடன் விஷயம் சரோஜினிக்கு தெரியவந்ததுல இருந்து, வீட்டுல எந்நேரமும் தகராறு தான் நடந்திட்டு இருந்துருக்குது. இந்த சூழல்ல, சம்பவத்தன்னைக்கு நைட்டு கணவன் - மனைவி ரெண்டு பேத்துக்கும் மீண்டும் சண்டவரவே, பிரபு வீட்டுல இருந்த இரும்பு கம்பிய எடுத்து மனைவி சரோஜினியோட தலையில ஓங்கி ஓங்கி அடிச்சிருக்காரு. அதுல, அதிகப்படியான ரத்தம் வெளியேறியதால, சரோஜினி சம்பவ இடத்துலேயே உயிரிழந்துட்டாங்க. மனைவி உயிரிழந்ததும் பயந்து போன பிரபு, வீட்டு பின்புறத்துல இரவோடு இரவா ஒரு குழிய தோண்டி சரோஜினி சடலத்த புதைச்சிட்டு கமுக்கமா இருந்துருக்காரு. காவல்துறையினர் விசாரணையில கணவன் பிரபுதான் கொலையாளின்னு தெரியவரவே, அவன் மேல கொலை வழக்குப்பதிவு செஞ்சு சிறையில அடைச்சிட்டாங்க.

Related Link
சூனியம் செய்ததாக சந்தேகம்

சூனியம் செய்ததாக சந்தேகம்

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

1
7 hrs 11 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved