ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்த இஸ்ரோவின் 101 ஆவது ராக்கெட் திட்டம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. புவிப்பரப்பை தெளிவாக படம்பிடிக்கும் திறன்கொண்ட ரேடார் செயற்கைக் கோளுடன் பி.எஸ்.எல்.வி சி-61 ராக்கெட் திட்டமிட்டபடி இன்று காலை 5 மணி 59 நிமிடத்தில் விண்ணில் பாய்ந்த நிலையில், ராக்கெட்டின் முதல் இரண்டு அடுக்குகள் வெற்றிகரமாக பிரிந்ததாக இஸ்ரோ அறிவித்தது. ஆனால் மூன்றாவது அடுக்கு பிரிந்த போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் திட்டம் முழுமை அடையவில்லை என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.