news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews கள்ளக் காதலால் நடந்த கொடூர சம்பவம்
tv

Also Watch

tv

Read this

கள்ளக் காதலால் நடந்த கொடூர சம்பவம்

பாதுரியா, மேற்கு வங்கம்

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கால்வாயில் வெவ்வேறு இடங்களில் கிடந்த இளைஞரின் உடல் பாகங்கள். தலை, கை, கால், வயிற்றுப் பகுதிகளை கைப்பற்றி விசாரணையில் இறங்கிய போலீஸ். வழக்கையே திருப்பி போட்ட லாஸ்ட் ஃபோன் கால். செல்போன் நம்பரை ட்ரேஸ் செய்து கொலையாளிகளை கைது செய்த போலீஸ். வாக்காளர் திருத்தப் பணியை காரணமாக வைத்து இளைஞரை கொலை செய்தது விசாரணையில் அம்பலம். இளைஞரை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த நபர்கள் யார்? பின்னணி என்ன?

கால்வாயில் கிடந்த கையை கண்டு அதிர்ச்சி
பாதுரியா பகுதி வழியா பொதுமக்கள் சிலர் நடந்து போய்ட்டு இருந்தாங்க. அப்ப அங்குள்ள ஒரு கால்வாய்ல ஒருத்தரோட கை மட்டும் கிடந்துருக்கு. இதபாத்து அதிர்ச்சியடைஞ்ச நபர்கள், போலீஸ்க்கு ஃபோன் பண்ணி தகவல சொல்லிட்டாங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு, ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறையினர் கால்வாய்ல கிடந்த கைய கைப்பற்றிருக்காங்க. அடுத்து மற்ற உடல் பாகங்கள் எங்க கிடக்குதுன்னு தேட ஆரம்பிச்சுருக்காங்க போலீஸ். அப்ப அதுல இருந்து கொஞ்சம் தூரத்துல வயிற்றுப் பகுதியும், காலும் கிடந்துருக்கு. அந்த கால்வாயிலையே உள்ள மற்றொரு இடத்துல தலை கிடச்சுருக்கு. அதுக்கடுத்து உடல் பாகங்கள் எல்லாத்தையும் மீட்ட போலீசார், உயிரிழந்த இளைஞர் யாரு?ன்னு தெரிஞ்சுக்க விசாரணையில இறங்குனாங்க.

மகனை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார்
இதுக்கிடையில, பர்கானாஸ் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன ஒருத்தரு, தன்னோட மகன ரெண்டு நாட்களா காணும்ன்னு புகார் அளிச்சுருக்காரு. உடனே அந்த புகார வாங்குன போலீஸ், கால்வாய்ல இருந்து மீட்கப்பட்ட தலைய காட்டிருக்காங்க. அத பாத்த உடனே இது என்னோட மகன் நசீர் அலின்னு சொல்லி கதறி அழுதுருக்காரு. அடுத்து நசீர் அலிய கொன்னது யாரு, உங்களுக்கு யார் மேலையாவது சந்தேகம் இருக்குதான்னு போலீஸ் அவரு கிட்ட விசாரணை பண்ணிருக்காங்க. அப்ப என் மகனுக்கும் மருமகளுக்கும் அடிக்கடி வீட்ல பிரச்னை ஏற்பட்டுட்டே இருக்கும், அததவிர என் மகன் மற்ற எல்லார் கிட்டயும் அன்பா தான் பழகுவான்னு சொல்லிருக்காரு. இந்த நிலையில நசீர் அலியோட செல்போன கைப்பற்றுன போலீஸ், அவருக்கு அடிக்கடி வந்த கால் லிஸ்ட்ட எடுத்து பாத்துருக்காங்க. அதுல ரிஸ்வான்-ங்குற நபரோட பேரு காட்டிருக்கு. அதவச்சு ரிஸ்வானோட செல்போன் நம்பர ட்ரேஸ் பண்ண போலீஸ், அவர கஸ்டடியில் எடுத்து விசாரிச்சுருக்காங்க.

ரிஸ்வானுக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே தகாத உறவு
மேற்கு வங்கத்துல உள்ள பாதுரியா பகுதிய சேந்தவரு நசீர் அலி. இவருக்கு அதே பகுதியை சேந்த இளம்பெண் ஒருத்தங்களோட சமீபத்துல கல்யாணமாகிருக்கு. கணவனுக்கும் மனைவிக்கும் ஆரம்பத்துல இருந்தே ஒத்து வரல. ரெண்டு பேரும் எதுக்கெடுத்தாலும் சண்டை போட்டுக்கிட்டு இருந்துருக்காங்க. இந்த பிரச்னையால மனைவி அடிக்கடி தன்னோட தாய் வீட்டுக்கு போய்ருவாங்களாம். ஆனா நசீர் அலி, மனைவிய சமாதானப்படுத்தி வீட்டுக்கு கூப்டு வந்து வாழ்ந்துட்டு இருந்துருக்காரு. இதுக்கிடையில இளம்பெண்ணுக்கும் அதே பகுதியில் BLOஆ வேலை பார்த்துட்டு இருந்த ரிஸ்வானுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கு. முதல்ல நார்மலா பேச ஆரம்பிச்ச ரெண்டு பேரும் அடுத்து ஃபோன் நம்பர பரிமாறிக்கிட்டு ராப் பகலா பேசிட்டு இருந்துருக்காங்க. இந்த பழக்கமே இவங்களுக்குள்ள தகாத உறவாவும் மாறிருக்கு. கணவன் வேலைக்கு போனதுக்கு அப்புறம் அடிக்கடி ரிஸ்வான வீட்டுக்கு கூப்டுற மனைவி அவரு கூட தனிமையிலையும் இருந்துருக்காங்க.

நசீர் அலிக்கு ஃபோன் செய்த இளைஞர் ரிஸ்வான்
ஆனா, இவங்களோட கள்ளக்காதல் விவகாரம் அடுத்த கொஞ்சம் நாட்கள்லையே நசீர் அலிக்கு தெரியவந்துருக்கு. இதனால கணவன் மனைவிக்கு இடையில அடிக்கடி பிரச்னை ஏற்பட ஆரம்பிச்சுருக்கு. மனைவிய போட்டு சரமாரியா அடிச்சுருக்காரு கணவன் நசீர் அலி. கள்ளக்காதலுக்கு கணவன் தடையா இருக்குறதா உணர்ந்த இளம்பெண், கள்ளக்காதலன் கூட சேந்து கணவன கொலை செய்ய திட்டம் போட்ருக்காங்க. அதுபடி நடந்த எல்லா விஷயத்தையும் தன்னோட நண்பர் ஒருத்தர் கிட்ட சொன்ன ரிஸ்வான், இந்த சம்பவம் கச்சிதமா முடிஞ்சுருச்சுனா, நிறைய பணம் தர்றதா சொல்லி அவரையும் இந்த கொலை திட்டத்துல சேத்துக்கிட்டாரு. மேற்கு வங்கத்துல இப்ப வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்துட்டு இருக்கு. இந்த பணிய தனக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்ட ரிஸ்வான், நசீர் அலிக்கு ஃபோன் பண்ணி வாக்காளர் பட்டியல்ல உங்க பேரு மற்றும் டீடைல்ஸ் கரைக்டா இல்லை.

அதனால நான் சொல்ற இடத்துக்கு வாங்க, எல்லாப் பிரச்னையும் சரி பண்ணிறலாம்ன்னு சொல்லி, அவர ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு கூப்டுருக்காரு. அதநம்பி நசீர் அலியும் அங்க போக, ரெண்டு பேரும் பேசிட்டு இருந்துருக்காங்க. அப்ப பின்புறம் வழியா வந்த நண்பர், நசீர் அலிய சரமாரியா தாக்கிருக்காரு. அந்த நேரத்துல மறைச்சு வச்சுருந்த அரிவாள எடுத்த ரிஸ்வான் நசீர் அலிய சரமாரியா வெட்டிக் கொன்னுருக்காரு. அடுத்து உயிரிழந்த நபர் யாருன்னு தெரியக்கூடாது-ங்குறதுக்காக கை, கால், வயிறு, தலைன்னு எல்லாத்தையும் துண்டு துண்டா வெட்டிய நபர்கள், அந்த உடல் பாகங்கள அங்குள்ள ஒரு கால்வாய்ல மூன்று வெவ்வேறு இடங்களல் வீசிட்டு தப்பிச்சு போய்ட்டாங்க. ஆனா, லாஸ்ட்டா வந்த செல்போன் கால் லிஸ்ட் வச்சு ரிஸ்வான் தான் உண்மை கொலையாளின்னு கன்பார்ம் பண்ண போலீஸ், ரிஸ்வானையும் அவரோட நண்பர் ஒருத்தரையும் அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க.

Related Link
காதலால் 23 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

காதலால் 23 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

           

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

0
1 hr 6 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved