Also Watch
Read this
By: Manigandan Raja

5 குழந்தைகள் உட்பட 12 பேர் பலி :
ஹரியானாவில் கடந்த சில நாட்களில் மட்டும் 5 பள்ளிக் குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
பல்வெல் மாவட்டம் சயின்சா கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு வாந்தி, வயிற்று வலி, காய்ச்சல் போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த 15 நாட்களில் மட்டும் 5 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, சுகாதாரத்துறையினர் அக்கிராமத்துக்கு விரைந்து பரிசோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பலருக்கும் நுரையீரல் பாதிப்பு இருந்தது தெரியவந்த நிலையில், பல இடங்களில் குடிநீர் அசுத்தமாக இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved