Also Watch
Read this
By: Manigandan Raja

பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல் :
கேரள மாநிலம் ஆலப்புழா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சையின் போது, கத்தரி கோலை வயிற்றுக்குள் வைத்து தைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புன்னபுரா பகுதியை சேர்ந்த உஷாவுக்கு 2021ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை நடந்து வீடு திரும்பிய நாளில் இருந்து வயிற்று வலி தொடர்ந்த நிலையில், பல்வேறு சிகிச்சை பெற்றும் வலி குறையவில்லை எனக் கூறப்படுகிறது.
தொடர்ந்து வலி மாத்திரை சாப்பிட்டதால் சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை ஏற்பட்டதையடுத்து, மருத்துவனைக்கு சென்று ஸ்கேன் எடுத்து பார்த்ததில் வயிற்றுக்குள் 10 சென்டி மீட்டர் நீளமுள்ள கத்திரிக்கோல் இருந்தது தெரியவந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved