news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புதுச்சேரியிலும் விசில் - விஜய் மகிழ்ச்சி
tv

Also Watch

tv

Read this

புதுச்சேரியிலும் விசில் - விஜய் மகிழ்ச்சி

புதிய நிர்வாகக் குழு

131

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

புதுச்சேரி மாநிலத்திற்கும் தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளதாக விஜய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் தவெக அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க புதிய நிர்வாகக் குழுவையும் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் விசில்
புதுச்சேரி மாநிலத்திற்கும் தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளது என்றும், புதுச்சேரியிலும் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன் என்றும் தவெக தலைவர் விஜய் கூறி உள்ளார். புதுச்சேரி மாநிலத்திற்கு புதிய நிர்வாகக் குழுவையும் நியமித்து தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டு, தவெக அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க நிர்வாக குழுவை நியமித்துள்ளார்.

பொது சின்னம் கோரி மனு
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பொதுச் சின்னம் ஒதுக்கக் கோரி, இந்திய தேர்தல் ஆணையத்திடம் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. விசில், ஆட்டோ, கிரிக்கெட் மட்டை, சாம்பியன் கோப்பை போன்ற 10 விருப்ப சின்னங்களை பட்டியலிட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தமிழக வெற்றிக் கழகத்துக்கு 234 தொகுதிகளிலும் பொதுச் சின்னமாக விசில் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.

புதுச்சேரிக்கும் கிடைத்த விசில்
இதனை தொடர்ந்து புதுச்சேரியிலும் தேர்தலில் போட்டியிட தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் தேர்தலிலேயே விஜய் தலைமையிலான தவெக பொதுச் சின்னத்தில் போட்டியிட உள்ளது. இதனை தவெக தொண்டர்கள், மகிழ்வோடு கொண்டாடி வருகின்றனர்.


Related Link
திரிஷா பற்றிய பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் வருத்தம்

திரிஷா பற்றிய பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் வருத்தம்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

0
4 hrs 18 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved