Also Watch
Read this
By: Manigandan Raja

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்கிறது. இந்த சிறப்புமிக்க கோவில் கமலாலய குளத்தில் தெப்பத்திருவிழா கடந்த 8-ந் தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது.
இன்று நிறைவு நாளில் தெப்ப உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் பார்வதிகல்யாணசுந்தரர் எழுந்தருள தெப்பம் இரவு 8.30 மணிக்கு குளத்தின் கீழ் கரை பகுதியில் புறபட்டு தென்கரை, மேல்கரை, வடகரை வழியாக 3 முறை வலம் வந்தது.
வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் இசை கச்சேரியுடன் தண்ணீர் மிதந்து வரும் அழுகுமிகு காட்சி காண ஆயிரகணக்கான பக்தர்கள் 4 கரைகளிலும் திரண்டனர். கடைசி நாள் என்பதால் அலைமோதிய பக்தர்கள் கூட்டத்தை கட்டுபடுத்திட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved