Also Watch
Read this
By: Manigandan Raja

தேரில் எழுந்தருளிய குழந்தை இயேசு :
காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட நிரவி பகுதியில் அற்புதக் குழந்தை இயேசு ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஆண்டு திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது கொடியேற்றத்தை ஒட்டி பங்கு தந்தையால் மந்திரிக்கப்பட்ட குழந்தை இயேசு உருவம் பொறிக்கப்பட்ட கொடி நிரவி பகுதியின் பல்வேறு வீதிகளில் வலம் வந்து தேவ மன்றாட்டுக்களுடன் கொடி ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி நாளான இன்று அலங்கார தேர்பவனி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து நாளை கொடி இறக்கத்துடன் அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா நிறைவடைகிறது. இந்தக் அலங்கார தேர்பவனில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டி கே எஸ் எம் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved