Also Watch
Read this
By: Manigandan Raja

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இதனால் திருவிழா, விசேஷ நாட்களை தவிர்த்து நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாதேஷ் என்பவர் அவரது குடும்பத்தினருடன் கடந்த ஏழாம் தேதி மாலையில் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்துள்ளார். கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள ஒரு கண்டெய்னர் பாக்ஸ் அருகே சிறுவர்கள் உட்பட சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் பக்தர்களுக்கு வேல் பொட்டு வைத்து வந்துள்ளனர்.
இவர்கள் வருகின்ற பக்தர்களிடம் உடைமைகளை பாதுகாப்பதாக கூறி ரூபாய் முப்பது பெற்றுக்கொண்டு உடமைகளை அந்த கண்டெய்னர் பாக்ஸ் உள்ளே வைத்துள்ளனர். கோவிலில் பக்தர்கள் உடைமைகளை பாதுகாக்க தனியறை உள்ளது.
ஆனால் விவரம் தெரியாத பக்தரிடம் இவர்கள் இதுதான் கோவில் பக்தர்கள் உதவிகள் பாதுகாக்க கூடிய இடம் என்று கூறிக்கொண்டு விவரம் தெரியாத பக்தர்களிடம் அவரது உடைமைகளை வாங்கி வைத்து
வந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி சேர்ந்த பக்தர் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி வந்து உடைமைகளை பெற்றுக் கொண்டபோது அதில் செல்போன் இல்லை என தெரியவந்தது. மேலும் உடைமையை வாங்கி வைத்த சிறுவர் அங்கு இல்லை இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் போலீசார் செல்போனுக்கு உரிய பில் கேட்டதால் நேற்று முன்தினம் வந்து பில்லை கொடுத்துள்ளனர் மேலும் அந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவனையும் பிடித்துக் கொடுத்துள்ளனர்.
ஆனால் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்காமல் தாமதித்து வருவதாக பக்தர் குற்றம் சாட்டினார். மேலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடைமைகள் அடிக்கடி திருடப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது.
காரில் இருக்கும் உடைமைகளும் கடற்கரையில் குளிக்கும் போது பக்தர்கள் கொண்டு சென்ற உடைமைகளும் நூதன முறையில் தொடர்ந்து திருடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் திருப்பி திருச்செந்தூருக்கும் அலைய வேண்டியது உள்ளது என எண்ணி புகாரை பெயரளவில் கொடுத்துவிட்டு சென்று விடுகின்றனர்.
இதனைப் பயன்படுத்திக் கொண்ட போலீசார் புகார் மீது எந்த ஒரு முழுமையான விசாரணையும் நடவடிக்கையும் எடுப்பதில்லை. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் கடந்த சில மாதங்களாக
வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் உட்பட சுமார் 100 பேர் கோவில் வளாகத்தில் பல்வேறு இடங்களில் நின்று கொண்டு வேல் பொட்டு வேல் பொட்டு என்று கூவி பக்தர்களுக்கு வேல் போட்டு அச்சு மூலம் வைத்துவிட்டு ரூபாய் பத்தை பெற்றுக் கொள்கின்றனர்.
அதில் ஒரு சிலர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று போலீசாருக்கு பல்வேறு புகார் வந்த போதும் நடவடிக்கை எடுக்காததால் மேலும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகள்
முழு விசாரணை நடத்தி இது மாதிரி பக்தர்களிடம் நூதன முறையில் திருடும் கொள்ளை கும்பல்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.