Also Watch
Read this
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தனிப்பெரும் கட்சி தவெக
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். இந்த நிலையில், இன்று மே 11ஆம் தேதி தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரின் இல்லத்தில், நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ஸ்டாலின் இல்லத்தில் விஜய்
முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு வந்த ஜோசப் விஜய்யை, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாசலுக்கே வந்து ஆரத் தழுவி வரவேற்றார். அறைக்குள் நுழைந்த போது, திமுக தலைவர் ஸ்டாலின், கட்டியணைத்து வரவேற்றார்.

முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு முதல்வர் ஜோசப் விஜய் பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார். பதிலுக்கு ஸ்டாலினும் ஜோசப் விஜய்க்கு பொன்னாடை போர்த்தினார். உதயநிதி ஸ்டாலின் ஜோசப் விஜய்க்கு புத்தகம் வழங்கினார்.

இதனையடுத்து முதல்வர் ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறிது நேரம் உரையாடினார்கள்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved