Also Watch
Read this
By: Manigandan Raja

அசாம் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பாஜகவின் மூத்த தலைவர் :

பாஜகவின் மூத்த தலைவர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அசாம் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து வரும் 12-ம் தேதி அவர் முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகதான் நமது அனைவருடைய முதல் எதிரி - மம்தா :
நாடு முழுவதும் பாஜகவை எதிர்க்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என மேற்கு வங்கத்தின் முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, சுவேந்து அதிகாரி தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது.

இந்நிலையில் பாஜகதான் நம் அனைவருடைய முதல் எதிரி என்று கூறிய மம்தா பானர்ஜி, நாட்டில் இடதுசாரி கட்சிகள், எதிர்க்கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகள் அனைத்தும் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved