Also Watch
Read this
By: Manigandan Raja

போராட்டத்தால் வெறிச்சோடிய வீதிகள் :
ராஜபாளையத்தில், தனியார் சந்தை நிர்வாகத்தின் அதிரடி (அட்வான்ஸ் தொகை) முன்பணம் உயர்வு மற்றும் அபராத நடவடிக்கைகளைக் கண்டித்து வியாபாரிகள் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் AKDR ஸ்தாபனம் (அறக்கட்டளை) சார்பில் தனியார் சந்தை செயல்பட்டு வருகிறது.
இந்த அறக்கட்டளையை ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுதாரர்கள் சுழற்சி முறையில் நிர்வகித்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணராஜா என்பவர் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
புதிய நிர்வாகம் பொறுப்பேற்றது முதல், சந்தையில் கடை வைத்துள்ள சிறு மற்றும் குறு வியாபாரிகளுக்குக் கடும் நெருக்கடி கொடுக்கப்படுவதாகக் வியாபாரிகள் குற்றம் சாட்டும் நிலையில்.
குறிப்பாக:
கடைகளுக்கான வாடகை தொகையை இரண்டு மடங்கு உயர்த்தியது. முன்பணத் தொகையை (Advance)திடீரென பல மடங்கு உயர்த்தி வழங்கக் கட்டாயப்படுத்துவது.
வியாபாரிகள் மீது தேவையற்ற காரணங்களைக் கூறித் தொடர் அபராதங்கள் விதிப்பது. என நிர்வாகத்தின் இத்தகைய நடவடிக்கைகளால் தங்கள் வாழ்வாதாரம் முற்றிலுமாகப் பாதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள வியாபாரிகள்,
நிர்வாகத்தை கண்டித்து இன்று ஒரு நாள் அடையாளக் கடையடைப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இன்று அதிகாலை முதல் சந்தையில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால், காய்கறிகள் மற்றும் விளைபொருட்களின் விற்பனை இன்றி சந்தை வளாகம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
இந்த ஒரு நாள் போராட்டத்தின் காரணமாக மட்டும் சுமார் 3 கோடி ரூபாய் வரையிலான வர்த்தக வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
தனியார் நிர்வாகத்தின் கெடுபிடிகளால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீதிக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே தமிழக அரசும் மாவட்ட அதிகாரிகளும் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு உரியத் தீர்வு காண வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் சந்தை மார்க்கெட் கடை உரிமையாளர் சங்க தலைவர் பேட்டி இணைக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved