சிறையில் அடைத்தனர் : சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி நேற்று தனது வீடான 2 வது தளத்தில் இருந்து கீழே இறங்கி கடைக்கு சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த விஜய் (35) என்பவர் அந்த சிறுமியை கையை பிடித்து தனது வீட்டிற்குள் இழுத்து சென்றார். அதிர்ச்சி கூச்சலிட்டார். சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. சிறுமியின் சத்தம் கேட்டு தாய் ஓடி வந்து கதவை தட்டி திறந்து தனது மகளை மீட்டார். அந்த பகுதி மக்கள் விஜயை பிடித்து அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அயனாவரம் போலீசில் ஒப்படைத்தனர். சிறுமியின் தாயார் அயனாவரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் போக்சோ சட்டபிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். விஜயை போலீசார் கைது செய்தனர். பொதுமக்கள் தாக்கியதில் விஜய் காயமடைந்தார். அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு போலீசார் விஜயை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். Related Link மருத்துவக் கழிவு மறுசுழற்சி தொழிற்சாலையில் தீவிபத்து