Also Watch
Read this
By: Manigandan Raja

இரண்டாம் நாள் வைபவம் :
அறுபடை வீடுகளில் இரண்டாம் அடை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றானது மாசி திருவிழா. இந்த ஆண்டு மாசித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இன்று இரண்டாவது நாள் மாலையில் இரண்டாவது திருவிழா மண்டகப்படி மண்டபத்தில் வைத்து சுவாமி குமரவிடங்க பெருமாளுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் அபிஷேகம்
மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சுவாமி குமர விடங்க பெருமாள் சிங்க கேடயச் சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் பெரிய கேடயச் சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved