கன்னியாகுமரி மாவட்டத்தில் நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்தும் 8 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ரவுடியை கேரளாவில் வைத்து போலீசார் கைது செய்தனர். நித்திரவிளை பகுதியை சேர்ந்த விஜி ராஜ் மீது கூட்டு பலாத்கார வழக்கு, கொலை முயற்சி, அடிதடி என பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.