news-tamil-logo

3/22/2026, 3:33:26 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews MLA பழனியாண்டியின் கொடூர முகம்
tv

Also Watch

tv

Read this

MLA பழனியாண்டியின் கொடூர முகம்

போலீஸ் என்ன உங்க வீட்டு ஆளா?

Posted on: Feb 03, 2026 05:12 AM

28

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கரூரில், குவாரி முறைகேடு குறித்து செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் தமிழ் செய்தியாளர் குழுவை கொடூரமாக தாக்கிய எம்.எல்.ஏ. பழனியாண்டியின் அடியாட்கள், தற்போது போலீசாரின் விசாரணையை திசை திருப்ப, செய்திக் குழு தாக்கியது போல கையை கிழித்துக் கொண்டு நாடகம் ஆடியது அம்பலமாகியிருக்கிறது. செய்தியாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி விட்டு, கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் கையை கிழித்துக் கொள்ள எம்.எல்.ஏ.வின் மகன் சதி ஆலோசனை கொடுக்கும் ஆடியோ சிக்கியிருக்கும் நிலையில், எம்.எல்.ஏ. தரப்பு மீது போலீஸ் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

போலி புகாரை கொடுத்து போலீஸை வைத்து விளக்கம்
கரூர் மாவட்டம், சிவாயத்தில் செயல்பட்டு வரும் எம்.எல்.ஏ. பழனியாண்டியின் கல் குவாரிக்கு செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் தமிழ் திருச்சி மாவட்ட செய்திக் குழுவை கண்மூடித்தனமாக எம்.எல்.ஏ. பழனியாண்டியின் ஆட்கள் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலை வெறி தாக்குதல் நிகழ்த்தி விட்டு, குவாரிக்கு சென்று செய்தி குழு பேரம் பேசியது என போலி புகாரை கொடுத்து போலீஸை வைத்து விளக்கம் கொடுக்க வைத்தது எம்.எல்.ஏ.தரப்பு.

எம்.எல்.ஏ. பழனியாண்டியின் மகன் விமலநாதன்
இவையெல்லாவற்றுக்கும் உச்சமாக, செய்திக் குழு மீது பழி சுமத்துவதற்காக தங்களது கைகளை தாங்களே கிழித்துக் கொண்டு, மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார்கள் எம்.எல்.ஏ. பழனியாண்டியின் ஆட்கள். செய்திக் குழு தாக்கியதில் கையே கிழிந்து ரத்தம் கொட்டியது என போலீஸை நம்ப வைக்க எம்.எல்.ஏ. பழனியாண்டி தரப்பு செய்த சதி வேலை ஒரே ஒரு ஆடியோவில் அம்பலமாகியிருக்கிறது. கையை கிழித்துக் கொண்டு மருத்துவமனையில் அட்மிட் ஆக சொல்லி, எம்.எல்.ஏ. பழனியாண்டியின் மகன் விமலநாதன் பேசும் உரையாடலும் ஆடியோவில் பதிவாகியுள்ளது.

வாய் துடுக்காக பேசும் ஆடியோவும் லீக்
கையை கிழித்துக் கொண்டு மருத்துவமனையில் அட்மிட் ஆனால், இரு தரப்பு மோதல் நடந்தது போல சித்தரித்து காவல்துறையை குழப்பத்திற்கு ஆளாக்க எம்.எல்.ஏ. பழனியாண்டியின் தரப்பு முயற்சி செய்திருக்கிறது. இந்த சதி திட்டத்தின் படியே குவாரியில் பணியாற்றும் இரண்டு பேர் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது. செய்திக் குழுவை தாக்கியதோடு மட்டுமல்லாமல், குளித்தலை காவல் நிலையத்தில் தானே புகார் அளிப்பார்கள், பார்த்துக் கொள்ளலாம் என எம்.எல்.ஏ.வின் மகன் விமலநாதன் வாய் துடுக்காக பேசும் ஆடியோவும் லீக் ஆகி உள்ளது.

செய்திக் குழுவை தாக்கி விட்டு...
என்னமோ, தாங்கள் எழுதி வைத்தது தான் சட்டம் என்பது போல காவல்துறையே தங்கள் கண் அசைவில் தான் இருக்கிறது என்பது போலவும் எம்.எல்.ஏ.வின் மகன் பேசுவது திடுக்கிட வைக்கிறது. இதுமட்டுமல்லாமல், செய்திக் குழுவை தாக்கி விட்டு கையில் வைத்திருந்த கேமரா, லைவ் கிட், மைக் உள்ளிட்ட 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை எம்.எல்.ஏ. பழனியாண்டி ஆட்கள் திருடி வைத்திருக்கிறது. செய்திக் குழுவின் உடமைகளை மீட்டுத் தர சொல்லி போலீசில் செய்திக் குழு புகார் அளித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீங்கள் யார்? ஐ.டி.கார்டை கொடுங்கள்
இது ஒரு பக்கம் இருக்க, செய்திக் குழு குவாரிக்கு சென்றபோது எம்.எல்.ஏ. பழனியாண்டி சம்பவ இடத்திலேயே இல்லை என பச்சை பொய்யை எம்.எல்.ஏ. தரப்பு பரப்பி வந்த நிலையில், அதற்கும் வசமான ஆடியோ சிக்கியுள்ளது. ரவுடி கும்பல் செய்தியாளர்களை தாக்கும் போது, அந்த இடத்தில் இருந்து எம்.எல்.ஏ. பழனியாண்டி பேசும் ஆடியோவும் பதிவாகியுள்ளது. நீங்கள் யார்? ஐ.டி.கார்டை கொடுங்கள் என எம்.எல்.ஏ. பழனியாண்டி மிரட்டுவதும் பதிவாகியுள்ளது.

கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
செய்திக் குழு மீது பொய் புகார் சொல்லி மாட்டி விடவே எம்.எல்.ஏ. பழனியாண்டி தரப்பு இவ்வளவு மெனக்கெடுகிறது என்றால், சாதாரண பொதுமக்களின் நிலைமையை நினைக்கும் போது மரண பயம் தான் வரும். கரூர் குவாரி விவகாரத்தில் உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும் என நியாயமாக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை தாக்கி விட்டு ரவுடியிசம் செய்து விட்டு அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டு, கடைசியில் பாதிக்கப்பட்டவர்கள் போல கையை கிழித்துக் கொள்வதும், புத்திசாலித்தனமாக சிசிடிவி காட்சிகளை அழிப்பதும் ஆடியோவாக சிக்கியிருக்கும் நிலையில், எம்.எல்.ஏ. பழனியாண்டி அவரது மகன் விமலநாதன் உள்பட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

Related Link
இன்றைய ராசி பலன்கள் 03022026

இன்றைய ராசி பலன்கள் 03022026

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓசியில் பரோட்டா கேட்டு கொடுக்காத ஆத்திரம்

1
4 mins agoshare
DMP Parotta issue








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved