news-tamil-logo

3/22/2026, 6:43:08 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஓசியில் பரோட்டா கேட்டு கொடுக்காத ஆத்திரம்
tv

Also Watch

tv

Read this

ஓசியில் பரோட்டா கேட்டு கொடுக்காத ஆத்திரம்

பொம்மிடி, தருமபுரி

Posted on: Mar 22, 2026 03:29 PM

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DMP Parotta issue

ஓசியில் பரோட்டா  :

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி, வினோபாஜி தெருவை சேர்ந்தவர் கார்த்திக் இவரது மனைவி பிரியதர்ஷினி, (37) இவர், கவிதா தியேட்டர் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். ஓட்டலில் பரோட்டா பார்சல் கட்டும் பணியில் இருந்தார்.

அப்போது வினோபாஜி தெருவை சேர்ந்த சச்சின் குமார், (27), ஓட்டலுக்கு வந்து பணம் தராமல், மூன்று பார்சல் பரோட்டா கேட்டுள்ளார்.பணம் கொடுத்தால் தான் பார்சல் கொடுக்கமுடியும் என
பிரியதர்ஷினி கூறினார்.

இதில் கோபம் அடைந்த சச்சின் குமார், பணம் கொடுக்க மாட்டேன் என்று கூறி, தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்து, பிரியதர்ஷினியின் தாடையில் ஓங்கி குத்தியதில் அவர் காய மயங்கி விழுந்தார்.

இதையடுத்து சச்சின் குமார் மற்றும் அவருடன் வந்த நபரும் அங்கிருந்து தப்பி ஓடினர். படுகாயமடைந்த பிரியதர்ஷினியை மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் இது குறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சச்சின் குமாரை கைது செய்தனர்.

Related Link
பல்வேறு நோய்களில் இருந்து குணமடைந்த பக்தர்கள் நேர்த்திக்கடன்

பல்வேறு நோய்களில் இருந்து குணமடைந்த பக்தர்கள் நேர்த்திக்கடன்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
2 hrs 18 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved