Also Watch
Read this
Posted on: Mar 22, 2026 03:38 PM
By: Manigandan Raja

குழந்தைகளின் வருகையும் கணிசமாக குறைந்து :
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் ஊராட்சிக்குட்பட்ட பஜார் தெரு பகுதியில் அங்கன்வாடி புதிய கட்டிடம் செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் ஏற்கனவே செயல்பட்டு வந்த கட்டிடம் முழுவதுமாக சேதமடைந்த நிலையில்.
பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2022-23-ஆம் ஆண்டு நிதி ஆண்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது.
இதற்கிடையே தேர்தலை கருத்தில் கொண்டு அவசர அவசரமாக திறந்த வைக்கப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தில் உரிய மின்வசதி, குடிநீர் வசதி போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளின்றி ஏதும் இல்லாமல் குழந்தைகள் கடுமையாக அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையால் அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகள் ஏராளமானோர் காற்று வசதி தண்ணீர் வசதி இன்றி கடுமையாக அவதிப்பட்டு வருவதாகவும் அதேபோல் குழந்தைகளின் வருகையும் கணிசமாக குறைந்து.
50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வருகை இருந்த நிலையில் தற்போது அது ஒற்றை இலக்காக மாறி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இளைஞர்கள் ஏராளமானோர் குற்றச்சாட்டை தெரிவிக்கின்றனர்.
மேலும் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தில் அடிப்படை வசதிகளின்றி இது தொடர்பாக அப்பகுதி சேர்ந்த இளைஞர்கள் அம்மூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோரிடம் இளைஞர்கள் குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில் அது சம்பந்தமாக உரிய பதிலளிக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக தெரிவித்தனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அங்கன்வாடி குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக மின்சார வசதி மற்றும் தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் ஏராளமானோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved