news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சாலையோர பள்ளத்தில் இறங்கி மரத்தில் மோதிய பேருந்து
tv

Also Watch

tv

Read this

சாலையோர பள்ளத்தில் இறங்கி மரத்தில் மோதிய பேருந்து

ஆம்பூர், திருப்பத்தூர்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மரத்தில் மோதிய பேருந்து

மரத்தில் மோதிய பேருந்து : 

கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு, அரசு பேருந்து, சென்னை நோக்கிச்சென்றுக்கொண்டிருந்த போது, திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த ஜமீன், பகுதியில் உள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில்.

அரசு பேருந்து சென்ற போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சாலையோர பள்ளத்தில் இறங்கி, அங்கிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக, ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் 10க்கும் மேற்பட்டோர், மேல்சிகிச்சைக்காக, வேலூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இவ்விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பயணிகளை ஏற்றிச்சென்ற அரசு பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
காலி பாட்டில் விவகாரம், டாஸ்மாக் கடைகள் மூடல்

காலி பாட்டில் விவகாரம், டாஸ்மாக் கடைகள் மூடல்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி

2
1 min agoshare
இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved