கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே திமுக மற்றும் அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இரு தரப்பினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கஸ்தூரிபாளையத்தில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய பாபு என்பவர், திமுக பேரூராட்சி தலைவர் விஸ்வ பிரகாஷ் குறித்து தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து திமுக நிர்வாகிகள் சிலர் பாபு வீட்டிற்கு சென்று அவரை தாக்கியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த பாபுவை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அதிமுக நகர செயலாளர் ரகுநாதன் என்பவரையும் திமுக நிர்வாகிகள் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்ககோரி இரு தரப்பினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.