Also Watch
Read this

பணி நிரந்தரம், காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை முறைப்படுத்த வலியுறுத்தி, கோவை தெற்கு மாவட்டத்தில் 105 டாஸ்மாக் கடைகளை அடைக்கப்பட்டிருந்தன.

காலி மது பாட்டில்கள் விவகாரம்
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், காலி மதுபாட்டில் பெறும் திட்டத்தை முறைப்படுத்த கோரி, தமிழகம் முழுவதும் டாஸ்மார்க் ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ச்சியாக, இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மார்க் கடைகளை அடைத்து ஊழியர்கள், பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை தெற்கு மாவட்டத்தில்...
கோவை தெற்கு மாவட்ட டாஸ்மார்க் ஊழியர்கள் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், இன்று மே 27ஆம் தேதி, கோவை சாலையில் உள்ள மாவட்ட டாஸ்மார்க் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட டாஸ்மார்க் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம் வழங்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலி மது பாட்டில்கள் பெறும் திட்டத்தை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

105 மதுக்கடைகள் மூடல்
கோவை தெற்கு மாவட்டம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 105 டாஸ்மார்க் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் கடைக்கு வரும் மது பிரியர்கள், மது கிடைக்காமல் திணறி வருவதாக கூறினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved