பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மணிமேகலையை கண்டித்து, 6 சிறப்பு விரிவுரையாளர்கள் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கல்லூரியில் பணியாற்றி வரும் அவர்களை, பொய்யான புகாரின் பேரில் முதல்வர் சஸ்பெண்ட் செய்ததாக கூறப்படுகிறது.