ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அழகுவேல் குத்தியும் தீக்குண்டம் இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர். முன்னதாக கடலில் புனித நீராடி பக்தர்கள் அங்கிருந்து மூக்கையூர் சாலை மற்றும் சாயல்குடியின் முக்கிய வீதிகளின் வழியாக செண்டை மேளதாளத்துடன் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதனை அடுத்து கோவில் முன்பு அமைக்கப்பட்ட தீ குண்டத்தில் பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் அனைவரும் இறங்கி வழிபட்டனர்.