மணல் திருட்டு : கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்த புகழூர் காவிரி ஆற்றின் குறுக்கே சுமார் 400 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 90% பணிகள் முடிவடைந்த நிலையில் அணைப்பகுதியில் அலுவலக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் மணல் லாரிகள் இரவு, பகலாக சென்று வந்துள்ளது. இதனை பார்த்த தவிட்டுப்பாளையம் பொதுமக்களும், இளைஞர்களும் தடுப்பணை கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடத்திற்கு சென்று பார்த்த போது, அணையின் கட்டுமானப் பணிக்கு என்று காவிரி ஆற்றிலிருந்து மணல் கொண்டு வரப்பட்டு அணையின் கட்டுமான காங்கிரிட் கலவை போடும் இடத்தில் கொட்டி வைக்கப்பட்டு, அங்கிருந்து இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மணல் லாரிகள் மூலம் கடத்தப்படுவதை உறுதி செய்தனர். இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அணையில் கட்டுமானப் பணிகள் நடைபெறாத நிலையில், அங்கிருந்து லாரிகள் அண்டை மாவட்டமான நாமக்கல் மாவட்டத்திற்கு சென்றுள்ளது. இதனை தொடர்ந்து தவிட்டுப்பாளையம் இளைஞர்கள், பொது மக்கள் அப்பகுதிக்கு சென்று லாரியில் மணல் ஏற்றப்பட்டிருந்த லாரி, மணல் அள்ளிப்போட பயன்படுத்தப்பட்ட பொக்ளின் இயந்திரங்களை சிறை பிடித்தார். கிராம நிர்வாக அலுவலர், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.. கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரரின் பணியாளர்கள் மூலம் இந்த மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருவதாக அப்பகுதி இளைஞர்கள் குற்றம் சாட்டினர். Related Link விளையாட்டில் ஆர்வம் காட்டுங்கள் இளைஞர்களே!