திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலைய நுழைவு வாயில் முன்பு உள்ள ஸ்டாண்டில் ஆட்டோக்களை நிறுத்துவது தொடர்பான பிரச்சனையில், குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கோட்டாட்சியரின் உத்தரவின் பேரில் புதிதாக சில ஆட்டோக்களை நிறுத்துவதற்கு அனுமதி கோரப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஆட்டோக்களை நிறுத்துபவர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களை போலீசார் கைது செய்தனர்.