திருவெறும்பூர் - வெங்கூர்- கல்லணை சாலையை ஒட்டிய BHEL நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் புதிதாக மின்கம்பங்கள் அமைக்க கூடாது, தற்போதைய நிலையே தொடர வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் மனு குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.