தேங்காய் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ள நிலையில், இந்த விலை உயர்வு 4 மாதங்கள் வரை நீடிக்கும் என தஞ்சை மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி சில்லறை விற்பனையில் 3 தேங்காய்கள் 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது மாறி, ஒரு தேங்காயே 25 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.