குமரி மாவட்டம் அருமனை அருகே வங்கி மேலாளர் வீட்டின் கதவை உடைத்து 40 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அண்டுகோடு பகுதியை சேர்ந்த சுபாஷ், களக்காட்டில் கிராம வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லிபினா அருமனையில் உள்ள தாய் வீட்டில் தங்கி களியக்காவிளை தலைமை தபால் நிலையத்தில் வேலை செய்து வரும் நிலையில், அண்டுகோடுவில் உள்ள வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதாக அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு சென்று பார்த்த லிபினா நகைகள் சிதறி கிடந்ததோடு, 66 சவரனில் 40 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை அறிந்து அருமனை போலீசில் புகார் அளித்தார்.