news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாவிழியம்மன் கோயிலில் மாசி மாத படையல் விழா
tv

Also Watch

tv

Read this

மாவிழியம்மன் கோயிலில் மாசி மாத படையல் விழா

அமராவதிபுதூர், சிவகங்கை

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SVG Festival

மாசி மாத படையல் விழா :

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதிபுதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாவிழியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பிறந்த வீட்டு பெண்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக மாசி படையல் விழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டுக்கான மாசி படையல் விழா இன்று காலை தொடங்கி இரவு வரை நடைபெற்றது ஞாயிறு காலை 11 மணிக்கு ஸ்ரீ மாவழிம்மன், ராக்காச்சி அம்மன் ஸ்ரீ வீரகாளி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அப்போது பிறந்த வீட்டு பெண்களை புகுந்த வீட்டு பெண்கள் உறவினர்கள் வரவேற்று அவர்கள் கொண்டு வந்த கோழி, சேவல் மற்றும் ஊர் சார்பிலும், உறவினர்கள் வழங்கிய 21 ஆடு கிடாய்கள், 25 கோழி, 25 சேவல்கள் பலியிட்டு அறுசுவையில், சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு இடித்து மருத்துவ குணம் கொண்ட அசைவ கிடாய் ரசம் , கோழி ரசம் சமைத்து பின்.

பரிவார தெய்வங்களுக்கு மாசி படையல் இட்டு வழிபாடு செய்தனர் பிறந்த வீட்டு பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக சமைத்த அறுசுவை அசைவ உணவு கோயில் வளாகத்தில் சன்னதி வாயிலில் பிறந்த வீட்டு பெண்கள், உறவினர்களுக்கு புகுந்த வீட்டு பெண்கள் உறவினர்கள் அறுசுவையுடன் அசைவ உணவு பரிமாறினர்.

கிராமத்தை சேர்ந்த பொது மக்கள், நண்பர்கள், குழந்தைகள் என அனைவரும் ஒன்று சேர்ந்து அமர்ந்து அசைவ உணவை உண்டு மகிழுந்தனர். சைவம் சாப்பிடுபவர்களுக்கு சைவ உணவும் பரிமாறப்பட்டது.

பிறந்த வீட்டுப் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மாசி படையல் விழா மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருவதாக வருகை தந்த பெண்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர் இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட மக்கள் விருந்தில் கலந்து கொண்டனர்.

Related Link
கல்லூரிக்கு படிக்க செல்வது தொடர்பாக தகராறு

கல்லூரிக்கு படிக்க செல்வது தொடர்பாக தகராறு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

1
8 hrs 18 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved